அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் நாமல் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, April 3, 2022

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் நாமல் ராஜபக்ஷ

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இன்றிரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளையடுத்து அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக அமைச்சுப் பதவியை துறக்கவும் தயார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment