க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் உரிய காலத்தில் நடைபெறும் என்கிறார் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, April 1, 2022

க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் உரிய காலத்தில் நடைபெறும் என்கிறார் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன

நாட்டில் நிலவும் கடதாசி தட்டுப்பாடு காரணமாக பரீட்சைகளை காலம் தாழ்த்துவதற்கான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே க.பொ.த உயர்தர பரீட்சை உட்பட அனைத்து பரீட்சைகளும் உரிய தினத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தேவையான போதியளவு கடதாசி கையிருப்பில் உள்ளதாகவும் அதில் எந்த சிக்கல்களும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கண்டிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த கல்வியமைச்சர், அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்தித்த தன் பின்னர் ஊடயகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடதாசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான தீர்வு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க எதிர்வரும் மே மாதத்தில் கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பரீட்சைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வகையில் கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சையை முன்னர் நடத்திய மாதத்திலேயே நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 10,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment