கூடுதல் விலைக்கு சமையல் எரிவாயுவை விற்பனை செய்யும் அல்லது எரிவாயுவை மறைத்து வைத்திருக்கும் விற்பனையாளர்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யப்போவதாக லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பொலிஸார், நுகர்வோர் அதிகார சபை மற்றும் லிற்றோ நிறுவனத்தினர் தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இதற்கு முன்னர் எரிவாயுவை வழங்கிய நிறுவனத்தினாலே அடுத்த மாதத்துக்கு தேவையான எரிவாயு விநியோகிக்கப்படும்.
ஏப்ரல் மாதத்துக்காக 30,000 மெற்றிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை லிற்றோ நிறுவனம் விலைகளை அதிகரிக்க அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
லாப் கேஸ் நிறுவனம் 4,199 ரூபாவாக அதிகரித்துள்ள போதும் லிட்ரோ கேஸ் விலைகள் தொடர்ந்து 2,657 ரூபாவாக காணப்படுகிறது. ஆனால் அநேக இடங்களில் 5,000 ரூபா வரை கேஸ் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment