மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் கருத்து : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்தும் கருத்து : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டண அதிகரிப்புக்கான திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கையை அண்மையில் கேட்டறிந்ததாக ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் மின்சார பற்றாக்குறையால் அதிக எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஒரு அலகு மின்சாரத்துக்கான செலவு அதிகரித்துள்ளது. 

இலங்கை மின்சார சபை ஒரு அலகு மின்சாரத்துக்கு 53 ரூபாவை செலவழித்த போதிலும், நுகர்வோர் ஒருவருக்கு 16 ரூபாவே அறவிடப்படுகின்றது.

எவ்வாறாயினும், கடந்த 08 வருடங்களாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment