நோர்வே இராச்சியத்தின் ஒஸ்லோவில் உள்ள இலங்கைத் தூதரம், ஈராக் குடியரசின் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கொன்சியூலர் அலுவகம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சரவையின் சமீபத்திய முடிவைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாடு எதிர்கொள்ளும் வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் பின்னணியில் வெளிவிவகார அமைச்சினால் மேற்கொள்ளப்படும், வெளிநாடுகளில் இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வெளி விவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment