(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஜனநாயக ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு அரச அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்ற சகல பிரஜைகளுக்கும் கட்சி பேதமின்றி இலவச சட்ட உதவிகளை வழங்க 600 க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "நாட்டை நாளுக்குநாள் பாதாளத்திலும் இருளிலும் தள்ளுகின்ற அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின்போதும், எதிர்க்கட்சி என்ற ரீதியில் மக்களுக்காக இருப்போம்.
காலங்காலமாக மக்கள் வாழ்வாதாரத்திற்காக போராடினாலும் அரசாங்கம் எதனையும் எல்லை நிர்ணயம் செய்யாததால் நாடு அராஜகமாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment