5500 மெட்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பியனுப்பப்பட்டது : லாப் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 2, 2022

5500 மெட்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பியனுப்பப்பட்டது : லாப் நிறுவனம்

(இராஜதுரை ஹஷான்)

கடன்பத்திரம் விநியோகிக்காத காரணத்தினால் 5500 மெட்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ளதால் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் பாவனையாளர்களுக்கு லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்படும் என லாப் நிறுவன தலைவர் டப்ள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவித்துள்ளார்.

எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

5500 மெட்றிக் தொன் எரிவாயு உள்ளடங்கிய கப்பலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதற்கு கடன்பத்திரத்தை விநியோகிக்காத காரணத்தினால் நாட்டின் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எரிவாயு கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ள காரணத்தினால் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் பாவனையாளர்களுக்கு லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்படும் என லாப் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனம் கொள்முதல் செய்துள்ள 3800 மெட்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நாளையதினம் நாட்டை வந்தடையவுள்ளது.

நேற்றையதினம் தரையிறக்கப்பட்ட 3800 மெட்றிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் ஊடாக விநியோகிக்கப்படும் நடவடிக்கை துரிதகரமான முன்னெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment