இலங்கை கிரிக்கெட் அணியின் 3 பிரிவுகளுக்கும் புதிய பயிற்றுநர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

இலங்கை கிரிக்கெட் அணியின் 3 பிரிவுகளுக்கும் புதிய பயிற்றுநர்கள் நியமனம்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்காலத்தில் கட்டியெழுப்பும் நோக்கில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனமானது, இலங்கை ஏ கிரிக்கெட் அணி, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி மற்றும்19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி ஆகிய 3 பிரிவுகளுக்கும் புதிய பயிற்றுநர் குழாம்களை நியமித்துள்ளது.

இந்த பதவி நிலைகளை தவிரவும், நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரதான பயிற்றுநராக இருந்த அன்டன் ரோக்ஸ், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக நியமிக்கபட்டுள்ளார்.

மேலும், இவர் தேசிய, ஏ, வளர்ந்துவரும் மற்றும் 19 வயதுக்குட்ட ஆகிய அணிகளுக்கான உயர் செயல்திறன் அதிகாரியாகவும் கடமையாற்ற உள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநராக செயற்பட்டு வந்த அவிஷ்க குணவர்தன இலங்கை ஏ கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளளார்.

மேலும், இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு ருவன் கல்பகேவும், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைமை பயிற்றுநராக ஜெஹான் முபாரக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கை ஏ கிரிக்கெட் அணிக்கு திலின கன்டம்பி உதவி பயிற்றுநராகவும், மலிந்த வர்ணபுர துடுப்பாட்ட பயிற்றுநராகவும், சஜீவ வீரகோன் பந்துவீச்சு பயிற்றுராகவும், உப்புல் சந்தன களத்தடுப்பு பயிற்றுநராகவும் அவிஷ்க குணவர்தனவுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.

இலங்கை வளர்ந்து வரும் அணியின் பிரதான பயிற்றுநராகவுள்ள ருவன் கல்பகே தலைமையிலான பயிற்றுநர் குழாமில் உதவி பயிற்றுநராக ருவின் பீரிஸும், துடுப்பாட்ட பயிற்றுநராக தம்மிக்க சுதர்ஷனவும், பந்துவீச்சு பயிற்றுநராக தர்ஷன கமகேவும் செயற்படவுள்ளனர்.

இலங்கை 19 வயதுக்குட்ட அணியின் பிரதான பயிற்றுநராகவுள்ள ஜெஹான் முபாரக்கின் பயிற்றுநர் குழாமில் சம்பத் பெரேரா உதவி மற்றும் துடுப்பாட்ட பயிற்றுநராகவும், சமில கமகே பந்துவீச்சு பயற்றுநராகவும், கயான் விசஜேகோன் களத்தடுப்பு பயிற்றுநராகவும் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment