ஹப்புத்தளை போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

ஹப்புத்தளை போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

ஹப்புத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹப்புத்தளை தங்கமலை தோட்டத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தோட்டத் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை நகர மத்தியப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அவர் சுகவீனமடைந்து ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில், ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment