24 மணி நேரமும் தொலைபேசியை செயலில் வைத்திருக்க வேண்டும் : பொலிஸாருக்கு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Monday, April 11, 2022

24 மணி நேரமும் தொலைபேசியை செயலில் வைத்திருக்க வேண்டும் : பொலிஸாருக்கு உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் (உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வரை) தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை, எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள முடியுமானவாறு செயலில் வைத்திருக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரட்ன உத்தரவிட்டுள்ளார்.

சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தமது கடமை நேர உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து அல்லது சப்தம் கேட்கா வண்ணம் செயற்படுத்தி வைப்பது அவதானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணும் வகையில் இவ்வாறு 24 மணி நேரமும் கடமை நேர உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிகள் செயலில் இருக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment