ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு பின்னர் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான உக்ரேனின், ஜபோரிஜியாவில் அமைந்துள்ள நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை ஜபோரிஜியாவின் அருகிலுள்ள நகரமான எனர்கோடரின் மேயர் உறுதிபடுத்தியுள்ளார்.
உக்ரேனின் தலைநகரான கிய்வ் இல் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள செயலிழந்த செர்னோபில் அணு ஆலையை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
உக்ரேன் மீதான படையெடுப்பு ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1 மில்லியன் அகதிகளை மோதல் வெளியேற்றத் தூண்டியுள்ளது. ரஷ்யாவின் பொருளாதாரத்தில் தாக்கம், மற்றும் பல தசாப்தங்களாக மேற்கு நாடுகளில் பரந்த மோதலின் அச்சம் ஆகியவற்றை உருவாக்கி, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment