அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பிரபல விக்கெட் காப்பாளரான ரோட் மார்ஷ் தனது 74 ஆவது வயதில் காலமானார்.
வியாழன் அன்று குயின்ஸ்லாந்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர், ரோயல் அடிலெய்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டத்தில் சிறந்த விளங்கிய மார்ஷ் 1970 மற்றும் 1984 க்கு இடையில் அவுஸ்திரேலியாவுக்காக 96 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 92 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்.
ஓய்வு பெறும்போது, டெஸ்ட் கிரிக்கெட்டின் அப்போதைய உலக சாதனையான 355 விக்கெட் கீப்பிங் ஆட்டமிழப்புகளை அவர் புரிந்திருந்தார்.
மார்ஷ் ஒரு ஆக்ரோஷமான இடது கை துடுப்பாட்ட வீரராக இருந்தார், அவர் டெஸ்ட் சதம் அடித்த முதல் அவுஸ்திரேலிய விக்கெட் காப்பாளர் ஆவார்.
இது தவிர அவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றியதுடன், 2014 இல் அவுஸ்திரேலிய அணியின் தேர்வாளர்களின் தலைவராகவும் ஆகி, இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார்.
No comments:
Post a Comment