கண்டி எசல பெரஹெராவின் புனித பேழையை அதிகளவான தடவைகள் சுமந்து சென்ற யானையான 'நெதுன்கமுவே ராஜா' உயிரிழந்துள்ளது.
69 வயதான குறித்த யானை இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக, கண்டி தலதா மாளிகை அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த குறித்த யானை, நோய் வாய்ப்பட்ட நிலையிலும் கடந்த வருட ஶ்ரீ தலதா மாளிகை புனித பேழையை சுமந்து சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
'நெதுன்கமுவே ராஜா' மரணம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனுதாபம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி அவரது சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில், 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல ஆண்டு காலமாக கண்டி தலதா பெரஹெரா பேழையை கொண்டு செல்லும் யானையின் மறைவு குறித்து நான் மிகவும் துக்கமடைந்தேன்.
உள்நாட்டு, வெளிநாட்டு மக்களின் கௌவரத்தை பெற்றுள்ள யானை அரசனே, தலதா மாளிகையின் புனித பேழையை போற்றும் வகையில் மேற்கொள்ளப்படும் உன்னத செயலின் பொருத்தத்தின் மூலம், ஆத்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment