உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் ஊரடங்கு - News View

About Us

About Us

Breaking

Thursday, March 31, 2022

உடன் அமுலாகும் வகையில் கொழும்பில் ஊரடங்கு

உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய, நுகேகொடை, களனி. கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக, பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வீட்டிற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்ற நிலையிலேயே, இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் ஊரடங்கு பெரும் நபர்கள் பொதுமக்கள் பாதுகாப்பை மீறுவதாக கருதி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

அத்துடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களின் ஊடாக வாகனங்களில் செல்வதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும், அது தொடர்பில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment