தொடர் மின் தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி, டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

தொடர் மின் தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி, டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின் தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மற்றும் பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் வியாழக்கிழமை 03.03.2022 இரவு 8.30 மணிக்கு இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் தங்களது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் பரவலாக பல மணி நேர மின்சாரத் தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. இதனால் மக்கள் அன்றாடம் பல பாதிப்புக்களுக்கு உள்ளாவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை எதிர்க்கும் முகமாக வியாழக்கிழமை 03.03.2022 இரவு 8.30 மணிக்கு செம்மணி A9 வீதி சந்தி மற்றும் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு, பெரிய கல்லாறுக்கு இடைப்பட்ட பாலத்தில் அனைத்து மக்களும் தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டும் முகமாக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் சகிதமாக வருகை தந்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment