பரசிட்டமோலின் உச்சபட்ச சில்லறை விலையை ரூ. 2.30 ஆக அறிவித்து அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
வலி நிவாரணியான பெரசிட்டமோல் 500 மில்லிகிராம் மாத்திரையின் விலையை ரூ. 2.30 ஆக நிர்ணயித்து, 2022 பெப்ரவரி 28 முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து வர்த்தகநாமங்களிலான பரசிட்டமோல் மாத்திரைகளுக்கும் செல்லுபடியாகும் வகையில், அதற்கமைய, 2015ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் 142ஆம் பிரிவின் கீழ், சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்லவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே குறித்த விலையிலும் பார்க்க கூடுதல் விலைக்கு பரசிட்டமோல் மாத்திரைகனை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment