ரஷ்யா மற்றும் பெலாரூஸுக்கு எதிராக மூன்றாவது சுற்று தடைகளை ஜப்பான் விதித்துள்ளதாக, அந்நாட்டின் நிதித்துறை தெரிவித்துள்ளது.
புதிதாக விதிக்கப்பட்டுள்ள இந்த தடைகள், மேலும் 20 ரஷ்யர்களுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை ஏற்படுத்தும்.
இவர்களுள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் நிர்வாகத்தில், அலுவலர்கள் குழுவுக்கான துணை தலைவர்கள், நாடாளுமன்ற துணை தலைவர்கள், சேசென் குடியரசின் தலைவர் மற்றும் அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுடைய வோல்கா குரூப், டிரான்ஸ்நெட் மற்றும் வாக்னெர் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல் அதிகாரிகளும் அடங்குவர்.
மேலும் 2 ரஷ்யர்கள், பெலாரூஸை சேர்ந்த 12 பேர் மற்றும் 12 பெலாரூஸ் நிறுவனங்களும் இதில் அடங்கும்.
மேலும், ரஷ்யாவுக்கு எண்ணெய் சுத்திகரிகரிப்பு உபகரணங்கள், ராணுவத்தால் பயன்படுத்தப்படும், பெலாரூஸுக்கு உட்பட்ட பொது பயன்பாட்டு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் ஜப்பான் தடை விதித்துள்ளதாக, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment