உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றவே எதிரணியினரின் ஜெனீவா விஜயம், படையினரை காப்பதற்காக அல்ல என்கிறார் டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Thursday, March 3, 2022

உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றவே எதிரணியினரின் ஜெனீவா விஜயம், படையினரை காப்பதற்காக அல்ல என்கிறார் டிலான் பெரேரா

பயங்கரவாதத்தை ஒழித்த படைவீரர்களை காப்பாற்றுவதற்காக அன்றி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்றவே எதிர்க்கட்சியினர் ஜெனீவா சென்றுள்ளதாக பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஊடகங்கள் முன் தீர்வுகளை முன்வைத்து வீரர்களாக தங்களை காட்டிக் கொள்ள முயற்சிக்காமல் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வலுப்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டுக்குள்ளேயும், உலகளவிலும் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுடன்தான் அரசாங்கத்துக்கு செயற்பட வேண்டியுள்ளது. நாட்டின் உட்பகுதியில் காணக்கூடிய பிரதான பிரச்சினை டொலர் பிரச்சினையாகும்.

பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது அமைச்சுக்களை சிறப்பாகச் செய்வதற்கு, கொரோனா தொற்றிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த முயற்சியை சிலர் மறந்து விடுகிறார்கள்.

இந்த நாட்டில் இறக்குமதிச் செலவைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை நாம் தெளிவாகக் காண்கிறோம்.

எமது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற, உள்நாட்டில் பயிரிடக்கூடிய பொருட்களை இங்கு பயிரிட ஜனாதிபதி ஆரம்பித்தார். புதிய உள்ளூர் தயாரிப்புகளை சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவற்றின் ஊடகத்தான் டொலர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் நமது நாட்டின் பொருளாதாரத்தில் சில தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நமது ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.

இந்த நாட்களில், ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் எமது நாட்டுக்கு எதிரான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எமது நாட்டில் உக்ரைனை விட மோசமான யுத்தம் நடந்தது.

அப்பாவி மக்களை கொன்று குவித்த புலிகளை, மஹிந்த ராஜபக்ச அரசு தோற்கடித்தது. இவ்வாறான அப்பாவி மக்களை கொன்ற புலிகளுக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற படை வீரர்களை இராணுவ நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல சிலர் முயல்கின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சிகள் எமது படைவீரர்களை காப்பதற்கு அன்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றவே ஜெனிவாவுக்கு செல்கின்றன. அவ்வாறானதொரு எதிர்க்கட்சியுடன்தான் இன்று செயற்பட வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment