நாட்டில், 26 ஆண்டுகளுக்குப் பின்னர், நேற்று முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்புக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 5 மணி நேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், இரண்டரை மணி நேரமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
மின்சார உற்பத்திக்கு அவசியமான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு, அடுத்த வாரத்துக்குள் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளாவிட்டால், மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் எதிராக வழக்குத் தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment