ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் : 1997 க்கு பிறகு அவசரமாக அழைக்கப்பட்டிருந்த ஐ.நா. பொதுச் சபை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 2, 2022

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் : 1997 க்கு பிறகு அவசரமாக அழைக்கப்பட்டிருந்த ஐ.நா. பொதுச் சபை

உக்ரேன் மீதான ரஷ்யா பலப்பிரயோகம் செய்வதை நிறுத்தி விட்டு அங்குள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 193 உறுப்பு நாடுகளில் 141 நாடுகள் ஆதரவாகவும் ரஷ்யா, சிரியா, பெலாரூஸ், வட கொரியா, எரிட்ரீயா ஆகிய ஐந்து நாடுகள் தீர்மானத்திற்கு எதிராகவும் வாக்களித்தன.

ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 35 நாடுகள் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை புறக்கணித்தன.

இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு இல்லாவிட்டாலும், இது சம்பந்தப்பட்ட நாடு மீது உலக அளவிலான அரசியல் அழுத்தத்தைத் தரும்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில்தான் உக்ரேனின் கெர்சன் துறைமுகத்தில் ரஷ்ய படையினர் கடுமையான வான் தாக்குதல்கள் மற்றும் கார்கிவ் நகரில் ஏவுகணை, குண்டு தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர்.

மரியூபோல் நகரில் இடைவிடாது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையால் அழைக்கப்பட்ட ஒரு அரிய அவசரகால அமர்வு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செயல்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.

இப்படியொரு அவசரகால அமர்வு இதற்கு முன்பு 1997ஆம் ஆண்டில் பலஸ்தீனம், ஜெருசலம் விவகாரத்தை விவாதிப்பதற்காக ஐ.நா சபையால் அழைக்கப்பட்டிருந்தது.

ஐ.நா தீர்மானம் மீது ஆதரவாக வாக்களித்த நாடுகள் பச்சை வண்ணத்திலும், எதிராக வாக்களித்த நாடுகள் சிவப்பு வண்ணத்திலும், புறக்கணித்த நாடுகள் மஞ்சள் நிறத்திலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

அவற்றின் விவரம் இதோ

No comments:

Post a Comment