தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த புதிய பீடங்கள், பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் : உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் - News View

About Us

About Us

Breaking

Saturday, February 26, 2022

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த புதிய பீடங்கள், பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும் : உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்

நூருல் ஹுதா உமர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்ற தாயின் சுய கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு கட்டுப்பட்டு ஒரு குடும்பம் போல் அனைவரும் செயற்பட வேண்டும் என உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் 22வது வருடாந்த பொதுக் கூட்டம் (24) எம்.எம்.நெளபர் தலைமையில், பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உபவேந்தர் கருத்து தெரிவிக்கையில்,  நல்லுள்ளம் படைத்தவர்களின் வேண்டுகோளின் பிரகாரம், கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தை அனைவருக்கும் பொருத்தமான இடமான பல்கலைக்கழக பிரதான நுழைவு வாயிலிலேயே பொருத்தப்பட்டதையிட்டு மிகவும் சந்தோசமாகவுள்ளது.

என்னுடைய பதவிக் காலத்தில் பல திட்டங்களை அடைய வேண்டும், புதிய பீடங்கள், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும், பல்கலைக்கழகம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தபட வேண்டும் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்த வேண்டும், இலங்கையில் உயர்ந்த பல்கலைக்கழகமாக இந்த பல்கலைக்கழகம் கொண்டுவரப்பட வேண்டும், ஆகவே அபிலாசைகளை நிறைவேற்ற ஒன்றிணைவது அனைத்து தரப்பினரும் பொறுப்பு என உபவேந்தர் சுட்டிக்காட்டினார்.

மேலும் நடைமுறை மற்றும் இலக்குகளை அடையக்கூடிய அணுகுமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வது மூலம் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கான தேவையான சகல பயிற்சிப் பட்டறை களையும் செய்து கொடுக்குமாறு பணிப்பாளருக்கு நான் பணித்துதிருக்கின்றேன். ஊழியர்களின் திறமைக்கு ஏற்ப எதிர்காலத்தில் பதவி உயர்வுகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில் ஊழியர் சங்கத்தின் பொதுக்கூட்டம் மற்றும் வருடம் இந்த தேர்தல் என்பதே இன்றைய இடம்பெற்றதோடு, சங்கத்தின் முன்னாள் தலைவர் உறுப்பினர் ஒருவர் நினைவுச் சின்னங்களை கையளிக்கும் நிகழ்வு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றன.

ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நெளபர் மற்றும் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் இணைந்து உபவேந்தர் அவர்களுக்கு நினைவு சின்னம் ஒன்றையும் கையளித்தனர். 

இன்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக, அப்துல் சத்தார் பதிவாளர் அவர்களும் சி. எப்.வன்னியாராச்சி (நிதியாளர்) அவர்களும் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்

இறுதியாக 2022 கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டன. தென் கிழக்கு பல்கலைக்கழக பொது ஊழியர் சங்கத்தின் புதிய தலைவராக எம்.எம். நெளபர் தெரிவு செய்யப்பட்டார். 

ஏனைய நிர்வாகிகளாக உப தலைவர் கே.எல். இப்ராஹிம், செயலாளர் எம். ஹாஷிர் முஹம்மது உப செயலாளர் எ.எம். நஷ்பி உப செயலாளர் எ.எம்.றம்ஷான், பொருளாளர் மு.க. றோஷான், நலம்புரி இணைச் செயலாளர் ஹாமில், உள்ள கணக்குப் பரிசோதகர் றினாஸ், முகாமைத்துவ பீடம் எ.சி. றியாஸ், கலை கலாச்சார பீடம் வை.எம். முபறாக், தொழில்நுட்பம் பீடம் றிபாய்தீன், அறபி மொழி பீடம் எம்.என்.எம்.ஜெஸீம், பொறியியல் பீடம் ஹாசீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment