மின் துண்டிப்பு நடைமுறை மூன்று மாதங்கள் தொடரலாம் : எதிர்வு கூறும் இலங்கை மின்சார சபை - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

மின் துண்டிப்பு நடைமுறை மூன்று மாதங்கள் தொடரலாம் : எதிர்வு கூறும் இலங்கை மின்சார சபை

தற்போது நடைமுறையிலுள்ள மின் துண்டிப்பை குறைந்தது மூன்று மாத காலத்திற்கு மேற்கொள்ள வேண்டி நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் துண்டிப்புக்கான நேர அளவில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் எனினும் தொடர்ந்து மூன்று மாத காலங்களுக்கு மின் துண்டிப்பைத் தொடர நேரிடும் என்றும் மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தி பிரதேசங்களில் காணப்படும் நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு மிகவும் குறைந்து காணப்படுவதாகவும் அந்தப் பகுதிகளில் தற்போது உள்ள நீர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கே மின் உற்பத்தியை மேற்கொள்வதற்கு போதுமானதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மீண்டும் மழை வீழ்ச்சி ஏற்பட்டு மேற்படி நீர்த் தேக்கங்களில் நீரின் அளவு மட்டம் அதிகரிக்கும் வரை தொடர்ச்சியாக மின்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மேற்படி பகுதிகளில் தற்போது எதிர்பார்க்கும் மழை வீழ்ச்சியை பெற்றுக் கொள்ள முடியாது என்றும் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடைக்கிடை சிறு அளவில் மழைவீழ்ச்சி ஏற்படும் என்றும் எனினும் அது மேற்படி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பதற்கு போதாது என்றும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment