அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் ? : இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் ? : இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

அது தொடர்பில் கருத்து தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரி, கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருந்த கப்பலிலிருந்து 37 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் டீசல் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அந்த டீசல் எதிர்வரும் சில தினங்களில் முடிவடைந்து விடும் என்றும் மீண்டும் டொலரை வழங்கி எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாது போனால் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருளை விநியோகிக்க வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தகைய நிலையில் பெருமளவிலான தனியார் போக்கு வரத்து சேவைகள் சீர்குலையும் நிலையும் ஏற்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான மோதல் காரணமாக கடந்த வாரத்தில் மசகு எண்ணெயின் விலை வெகுவாக அதிகரித்தது. எனினும் அது தற்போது சற்று குறைந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 94.70 அமெரிக்கன் டொலராக இருந்த நிலையில் மேற்படி மோதல் காரணமாக நான்கு நாட்களுக்குள் அதன் விலை 106 டொலராக அதிகரித்ததுடன் தற்போது அது 102 டொலராக சற்று குறைந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment