என்னைத் திருடன் என கூறுபவர் நிரூபித்தால் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பேன் - ஆனந்தசங்கரி சவால் - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

என்னைத் திருடன் என கூறுபவர் நிரூபித்தால் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பேன் - ஆனந்தசங்கரி சவால்

கோடிகளுக்கு அடிமைப்படாத என்னை திருடன் எனக்கூறி வருபவர் நிரூபித்தால் எனது சொத்துக்களை அடிமை சாசனம் எழுதி அவருக்கு வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பழம்பெரும் தமிழ் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை கைப்பற்ற முயற்சிப்போர் கட்சியின் வரலாறு தெரியாதவர்களும் கட்சியின் வயதின் கால்பங்கு கூட வரதாவர்களே அபகரிக்க முயல்கின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களுடைய சொத்து நான் பதவிகளுக்கு கோடிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது.

அமிர்தலிங்கம் இருந்தபோது நான் அப்போதிருந்த செல்வாக்கில் பாராளுமன்றம் சென்று இருக்கலாம் நீலன் திருச்செல்வம் வந்தபோது பாராளுமன்றம் சென்றிருக்கலாம் ஆனால் நான் அவ்வாறு பதவிகளுக்காக ஆசைப்படவில்லை.

அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்னை அழைத்து உன்னைப்போல் தமிழ் ஜனநாயகவாதி பாராளுமன்றத்திலே இருக்க வேண்டும் நான் ஆசனம் தருகிறேன் வா என்றார்.

நான் அவரிடம் பதவிகளுக்காக எனது கொள்கையை விட்டு உங்களிடம் சேர்வதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியை சரியான முறையில் ஒழுங்கமைக்கும் வரை யாருக்கும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் முடிந்தால் காட்சியை அபகரிக்க நினைப்பவர்கள் தமது அங்கத்துவத்தை உறுதிப்படுத்தினால் கட்சியை அவர்களிடம் கொடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் நிருபர்

No comments:

Post a Comment