பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கிலானி - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கிலானி

மேல் சபையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய பெரும்பான்மை இருந்தும், உறுப்பினர்கள் வராததால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேறியது.

பாகிஸ்தான் பாராளுமன்ற மேல் சபையான செனட் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை மிக முக்கியமான மசோதாவான, ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது எதிர்க்கட்சி தலைவரான யூசுப் ரசா கிலானி (வயது 60) உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை.

மேல் சபையில் எதிர்க்கட்சிகளுக்கு போதிய பெரும்பான்மை இருந்தும், உறுப்பினர்கள் வராததால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேறியது.

குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் கிலானி வந்திருந்தால்கூட அந்த மசோதா நிறைவேறியிருக்காது. எனவே, அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மசோதா நிறைவேறிய பின்னர், கிலானிக்கும் அவரது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், கிலானி தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

No comments:

Post a Comment