ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்த இந்தியா - News View

About Us

About Us

Breaking

Sunday, February 27, 2022

ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் புறக்கணித்த இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை இந்தியா புறக்கணித்தது.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக பொதுச் சபையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

எனினும் இந்தத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி வீட்டோ செய்ய முடியாது என்பதால், 11 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று இரவு ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடக்க இருக்கிறது. இதில் 193 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

No comments:

Post a Comment