இன்று முதல் அனைத்து வலயங்களிலும் ஒரே கட்டத்தில் பகல் வேளையில் 3 மணித்தியால மின் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, February 28, 2022

இன்று முதல் அனைத்து வலயங்களிலும் ஒரே கட்டத்தில் பகல் வேளையில் 3 மணித்தியால மின் வெட்டு

இன்றையதினம் (01) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 11 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் ஒரே கட்டத்தில் இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒவ்வொரு வலயத்திலுமுள்ள பிரதேசத்திலும் 2 கட்டங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

அதற்கமைய A,B,C மற்றும் P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் உள்ள பிரதேசங்களுக்கு மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை 3 மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் மின்சார கேள்வியை கட்டுப்படுத்த உச்ச பாவனை வேளையில் (இரவில்) உச்சபட்சம் 30 நிமிடங்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படலாமென, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, பி.ப. 6.00 - பி.ப. 10.00 மணி வரையான காலப் பகுதியின் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment