விநியோகத்திலும் பார்க்க கேள்வி அதிகம் : இன்று முதல் ஒரு மணித்தியால மின் வெட்டு - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

விநியோகத்திலும் பார்க்க கேள்வி அதிகம் : இன்று முதல் ஒரு மணித்தியால மின் வெட்டு

விநியோகத்திலும் பாரக்க நாட்டின் மின்சாரத்தின் கேள்வி அதிகமாகவுள்ளதால் நாட்டின் பல பகுதிகளிலும் மின்சார விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின்னுற்பத்தி இயந்திரமொன்று நேற்றையதினம் (31) மீண்டும் செயற்படுத்தப்பட்ட நிலையில் அது மீண்டும் இன்று (01) செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 270 MW மின்வலுவை விநியோகிக்கும் குறித்த மின்பிறப்பாக்கி செயலிழந்த போதிலும் நாட்டில் திட்டமிட்ட மின் வெட்டுக்கு அவசியமில்லை என, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

ஆயினும், தற்போது நிலவும் மின்சாரத்தின் அதிகரித்த கேள்வி காரணமாக ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று மாலை 6.30 முதல் இரவு 8.30 வரையான அதிக மின்சார கேள்வி உள்ள காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்ப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment