(இராஜதுரை ஹஷான்)
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் எதிர்வரும் 7 நாட்களுக்கு தேவையான டீசல் தொகை கையிருப்பில் உள்ளதால் எதிர்வரும் நாட்களில் டீசலை இயலுமான அளவு சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ள நிலைமையில் எதிர்வரும் 6 நாட்களின் பின்னரே டீசல் அடங்கிய எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடையும்.
கப்பலில் இருந்து டீசல் தொகையை தரையிறக்க குறைந்தப்பட்சம் மூன்று நாட்களேனும் தேவைப்படும். ஆகவே அதுவரையான காலப்பகுதியில் டீசல் பாவனையை இயலுமான அளவு மட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கூட்டுத்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
டீசல் விநியோகத்தின் போது இலங்கை போக்குவரத்து சபை, புகையிரத சேவை, முப்படை, வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்காகவும், கடற்தொழில் மற்றும் சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு கூட்டுத்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 7 நாட்களுக்கு தேவையான டீசலும், 8 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் உள்ளது.
37,500 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய 37,500 மெற்றிக்தொன் பெற்றோல் எதிர்வரும் 20 நாட்களுக்கு போதுமானதாக அமையும் என கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment