2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : 'பி' குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி : 'பி' குழுவில் இடம்பிடித்துள்ள இலங்கை

(ஜெ.அனோஜன்)

ஜூலை 29 ஆம் திகதி இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் ஆரம்பமாகவுள்ள 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 'பி' குழுவில் விளையாடவுள்ளது.

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்துடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்கு கடைசியாக தகுதி பெற்ற அணியாக சாமரி அதபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இருந்தது.

மலேசியாவில் நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியடையாத ஒரே அணியாக மாறி, போட்டிக்குத் தகுதி பெற்றது.

பொதுநலவாய போட்டியில் இலங்கைக்கு மேலதிகமாக அவுஸ்திரேலியா, பார்படாஸ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் ஆட்டங்களாக நடைபெறும். லீக் கட்டத்தில் இரண்டு குழுக்களாக போட்டிகள் இடம்பெறும்.

கடந்த மகளிர் டி:20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு வந்த அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் குழு ஏ-யில் இடம்பிடித்துள்ளன. அதேநேரம் பாகிஸ்தானும், பார்படாஸும் அதே குழுவில் உள்ளது.

குழு பி யில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன.

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதியாக 1998 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுநலவாய போட்டியில் ஷான் பொல்லாக் தலைமையிலான தென்னாபிரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது.

இப் போட்டியில் ஸ்டீவ் வாக் தலைமையிலான அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி தோற்கடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment