இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதற்கு கால அவகாசம் எடுக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்திருந்த வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து, சில மணித்தியாலங்களின் பின்னர் திடீரென இன்று நண்பகல் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சங்கத்தின் துணைத் தலைவரை பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் எடுத்த தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தனர்.
இதனால் புகையிரத பயணச்சீட்டுக்களை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன. இதன் காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
No comments:
Post a Comment