இலங்கை வந்தார் ஹங்கேரிய வெளிவிவகார அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

இலங்கை வந்தார் ஹங்கேரிய வெளிவிவகார அமைச்சர்

ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சிஜார்டோ (Péter Szijjártó) தலைமையிலான குழுவொன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (12) அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளது.

இன்று அதிகாலை 4.40 அளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தூதுக் குழுவினரை பிராந்திய கூட்டுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.

ஹங்கேரிய வெளியுறவு அமைச்சரின் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அவர் பல இருதரப்பு விவாதங்களில் ஈடுபடுவார்.

அதன் பின்னர் ஹங்கேரிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை 4:30 மணிக்கு நாட்டை விட்டு புறப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment