(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர் காணப்பட்ட ஒமிக்ரோன் நிலைவரத்தின் அடிப்படையில் மொத்த தொற்றாளர்களில் 12 - 24 சதவீதமானோருக்கு ஒமிக்ரோன் தொற்று காணப்படலாம் என்று மதிப்பிடப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் இறுதியாக கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பற்றி விபரங்கள் வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் 12 - 24 சதவீத ஒமிக்ரோன் தொற்றாளர்கள் காணப்பட்டலாம் என்று கணிப்பிடப்பட்டது.
எவ்வாறிருப்பினும் மூன்று வார காலம் என்பது நீண்டதொரு காலமாகும். எனவே இந்த காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அதனை தீர்மானிக்க முடியும்.
எனவே ஒமிக்ரோன் தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முதலிரு கட்டங்களுக்கு மேலதிகமாக, மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் என்றார்.
No comments:
Post a Comment