நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக சீன நிபுணர் இலங்கை வந்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஜெனரேட்டர் செயலிழப்பை ஆராயும் நோக்கிலேயே குறித்த சீன நிபுணர் வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை மின்சாரசபை தலைவர் தெரிவிக்கையில், குறித்த ஜெனரேட்டர் விரைவில் பழுதுபார்க்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் மின் விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமை பெருமளவில் தீர்க்கப்படும் மேலும் மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை தடையின்றி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மே மாதம் வரை நிலக்கரி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment