முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இராணுவப் பிரிவினைச் சேர்ந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) நண்பகல் ஏ.9 வீதி திருமுறுகண்டி பகுதியில் அமைந்துள்ள 11 ஆவது இயந்திர காலாட் படைப் பிரிவில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி, ஹிக்கடுவ பகுதியினைச் சேர்ந்த குறித்த சிப்பாய் தங்கூசி நூலினைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர்)
No comments:
Post a Comment