டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விசாவை அந்நாட்டு அரசு இரண்டாவது முறையாக ரத்து செய்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இன்று மதியத்துக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இரண்டாம் முறையாக விசா ரத்து செய்யப்பட்ட பின்னர் அவர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாததால் அவருடைய விசா முதலில் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் நீதிமன்றத்தின் மூலம் அவர் அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி பெற்றார். எனினும் இரண்டாவது முறையாகவும் அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று அதற்கு அவுஸ்திரேலிய அரசு காரணம் கூறியது.
நீதிமன்றம் தங்க அனுமதித்தால் திங்களன்று அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் விளையாடுவார்.
No comments:
Post a Comment