திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 5, 2022

திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியினால் கவனயீர்ப்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (5) மாலை திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சட்டத்தரணி அருன் ஹேமச்சந்திர தலைமையில் இவ்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்பினை வெளிக்காட்டினார்கள்.

நாட்டை விற்காதே, மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளாதே,எண்ணெய் வளத்தை பதுகாத்து அராஜகத்தை நிறுத்து போன்ற துண்டுப் பிரசுரங்களையும், சுவட்டிகளையும் கவனயீர்ப்பில் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment