ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான சுற்றறிக்கை பொதுச் சேவைகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் - அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி மற்றும் இந்த வருடத்தின் ஜனவரி 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கிணங்க இந்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்காக தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறையாகும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment