கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (04) நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கில் ''பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சித் தொடரின் போதே அவர் இந்த நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அண்மையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணியின் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர்.
திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நிதி உதவி வழங்கிவைக்கும் நிகழ்வை, ஏற்பாடு செய்திருந்ததுடன், குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்ற படகு பாதை பகுதியினையும் சஜித் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment