டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை டுபாய் செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார்.
நோவக் ஜோகோவிச்சின் விசாவை இரண்டாவது முறையாகவும் இரத்து செய்யும் அவுஸ்திரேலிய அரசங்கத்தின் முடிவினை பெடரல் நீதிமன்றம் இன்றையதினம் உறுதி செய்தது.
இதனால் டென்னிஸ் உலகின் நம்பர் வன் வீரரான நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தலை எதிர்நோக்க வேண்டியிருந்ததுடன், ஆஸி. ஓபனில் பங்கெடுக்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது.
இந்நிலையிலேயே ஜோகோவிச்சின் நீதிமன்ற தீப்புக்கு சில மணி நேரங்களின் பின்னர் மெல்போனில் இருந்து டுபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.
No comments:
Post a Comment