பொருட்கள் மற்றும் சேவை வரியை நிர்வகிக்கும் பணியை இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து நீக்கினால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரி சேவைகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இவ்வரிகளை நீக்குவதனால் வருவாய்த்துறை அலுவலர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுமென சங்கத்தின் இணைச் செயலாளர் எச்.ஏ.எல். உதயசிரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வரி நிர்வாகம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும், கலந்துரையாடவும் தொழிற்சங்கங்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது தொழிற்துறைக்கு தடையாக உள்ளது.
மேலும் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் வரிப் பரிந்துரைகளினால் வரி வருமானம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டை விட கடந்த வருடத்தில் சுமார் 60 பில்லியன் ரூபா வரி வருமானத்தை நாடு இழந்துள்ளதாகவும் அவர் கூட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment