கடலுக்கு சென்ற மீனவரின் சடலம் கரையொதுங்கியது - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

கடலுக்கு சென்ற மீனவரின் சடலம் கரையொதுங்கியது

வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன இருவரில் ஒருவருடைய சடலம் இன்று (31) ஆழியவளை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

வத்திராயன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிறேம்குமார் மற்றும் 21 வயதான தணிகைமாறன் ஆகிய இருவர் கடல் தொழிலுக்கு கடந்த 27ஆம் திகதி சென்ற நிலையில் கரை திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மீனவர்கள், விளையாட்டு கழகத்தினர் இணைந்து கடற்பரப்பில் இரவு பகலாக பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது அவர்களையோ, அவர்கள் பயணித்த படகினையோ கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அறுந்த வலைகள் மட்டுமே மீட்கப்பட்டிருந்தன.

அவர்களின் படகை இந்திய ட்ரோலர் படகுகள் மோதி விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம் என மீனவர்கள் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று (31) நண்பகல் தணிகைமாறன் என்பவருடைய சடலம் ஆழியவளை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(நாகர்கோவில் விஷேட நிருபர்)

No comments:

Post a Comment