இலங்கையில் பிரபலங்கள் செலுத்தத் தவறிய வாடகை விமான கட்டணம் ஒரு கோடியே 25 இலட்சம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

இலங்கையில் பிரபலங்கள் செலுத்தத் தவறிய வாடகை விமான கட்டணம் ஒரு கோடியே 25 இலட்சம்

இலங்கையில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பயணம் செய்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள விமானங்களுக்காக விமானப் படையினருக்கு ஒரு கோடியே 25 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதியை செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி நிதியை செலுத்தாமல் தவறவிட்டுள்ள நிறுவனங்களில் அமைச்சுக்கள் உள்ளிட்ட 10 அரச நிறுவனங்களும் இரண்டு தனியார் நிறுவனங்களும் உள்ளடங்குவதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க விமானப் படையினரிடமிருந்து 2003 - 2013 வருடங்களுக்கு இடையிலான காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட விமானங்களுக்கு 60 லட்சத்துக்கு அதிகமான நிதியும் 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட விமானத்திற்கு மேலும் 60 லட்சம் ரூபா நிதி செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரை இன்னும் அந்த நிதி செலுத்தப்படவில்லை என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment