மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதை எந்த அரசும் விரும்பாது : மூன்று மாதங்களில் நிலைமை சீராகும் என்கிறார் ரமேஷ் பத்திரண - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதை எந்த அரசும் விரும்பாது : மூன்று மாதங்களில் நிலைமை சீராகும் என்கிறார் ரமேஷ் பத்திரண

எந்த அரசாங்கமும் தமது மக்கள் வரிசையில் காத்துக்கிடப்பதை விரும்புவதில்லை. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி நிலை 03 மாதங்களில் சுமுகடையுமென எதிர்பார்ப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

மக்கள் கியூவில் இருப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருட்களின் விலை உயர்வதையோ கியூவிலிருந்து காத்துக் கிடப்பதையோ, அரசாங்கத்தை மக்கள் திட்டுவதைக் காணவோ எந்த ஒரு அரசும் விரும்பாது. இந்தப் பிரச்சினைகளில் அதிகமானவை பூகோள ரீதியில் ஏற்பட்ட நெருக்கடியால் ஏற்பட்டவையாகும். 

கடந்த 02 வருடத்தில் 14 பில்லியன் டொலரை இழக்க நேரிட்டது. நாட்டின் மொத்த கடன் சுமை 42 பில்லியன் டொலர்களாக உள்ளது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி நிலையே இன்று காணப்படுகிறது. 

கடந்த வருடம் ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன்களாக அதிகரித்தது. 20 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 08 பில்லியன் டொலர் தட்டுப்பாடு காணப்படுகிறது. 

பால் மா பாவனை அதிகமான உள்ள நாடாக எமது நாடு காணப்படுகிறது. மொத்த இறக்குமதி செலவில் 25 வீதம் எரிபொருள் இறக்குமதிக்கு செல்கிறது. 

தற்போது சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பி வருகிறது. அத்துடன் வெளிநாட்டில் பணிபுரிவோரினால் கிடைக்கும் அந்நிய செலாவணி உயர்ந்து வருகிறது. எனவே 03 மாதங்களில் நிலைமை சீராகுமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

சந்தையில் இருந்து மீளப் பெற்ற சிலிண்டர்களை வெற்றுச் சிலிண்டர்களாக மாற்ற அதிக காலம் செல்வதாக கேஸ் கம்பனிகள் சுட்டிக்காட்டியுள்ளன. போதுமான கேஸ் கையிருப்பில் உள்ளன. இந்த நிலையிலே மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். ஒரு வாரத்தில் நெருக்கடி தீரும் என கம்பனிகள் குறிப்பிட்டுள்ளன.

ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment