அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 6, 2022

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது. 

உடனடியாக காலை 6.40 மணிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மூன்று அடுக்கு மாடி கொண்ட அந்த குடியிருப்பில் இரண்டாவது மாடியில் பற்றிய தீ, 50 நிமிட போராட்டத்திற்கு பின்பு கட்டுப்படுத்தப்பட்டது.

இரண்டு வெளியேறும் வழிகளில் ஒன்றின் வழியாக எட்டு பேர் கட்டிடத்திலிருந்து தப்பிக்க முடிந்தது, ஏழு குழந்தைகள் உட்பட 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர் என்று பிலடெல்பியா தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீக்காயம் அடைந்த இரண்டு பேரை மருத்துவமனைகளுக்கு அனுப்பியதாகவும், 26 பேர் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

அந்த குடியிருப்பில் உள்ள தீ எச்சரிக்கை கருவிகள் வேலை செய்யவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த தீ விபத்தில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் வயதை தீயணைப்பு அதிகாரிகள் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment