ஆசிரியர் உதவியாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, January 14, 2022

ஆசிரியர் உதவியாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை

மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சேவையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கும் அரசினால் சகல அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கக்கோரி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், நாட்டில் நாளுக்குநாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு முகம் கொடுக்க முடியாமல் இருக்கும் இவ் ஆசிரியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் தற்போது 10,000 ரூபா கொடுப்பனவில் பல சிக்கல்களுக்கு மத்தியில் சேவை புரிவதால் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே ஆசிரியர் சேவைக்கு உருவாக்கப்படாமல் இருக்கும் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும்படி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment