சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, January 31, 2022

சுரங்க தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பேர் பலி

400 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் கோச்சபாம்பா மாகாணத்தில் உள்ள குயில்லாகொல்லோ நகரில் இருந்து காமி நகருக்கு சுரங்க தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை (29) பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் சுமார் 20 தொழிலாளர்கள் இருந்தனர்.

குயில்லாகொல்லோ-காமி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வீதியில் தறிக்கெட்டு ஓடிய பஸ் வீதியோரம் உள்ள 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில், இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment