(எம்.எப்.எம்.பஸீர்)
நெதர்லாந்திலிருந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுப்பட்ட 5 கிலோ எடையுடைய பொதியொன்றிலிருந்து சுமார் 26 மில்லியன் ரூபா வரை பெறுமதி மிக்க போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த பொதியை பெற்றுக் கொள்ள கொழும்பு மத்திய அஞ்சல் பறிமாற்று மத்திய நிலையத்துக்கு நேற்று வருகை தந்த வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும், சுங்கப் பிரிவின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர், பிரதி சுங்கப் பணிப்பாளர் ( சட்டம்) சுதத்த சில்வா தெரிவித்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரும், போதை மாத்திரைகளும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் அந்த பணியகம் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் கட்டில் விரிப்புக்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அடங்கியுள்ளதாக சுங்கப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொதியின் கார்ட் போர்ட் பெட்டிகளுக்குள் மிக சூட்சுமமாக இந்த போதை மாத்திரிகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கப் பிரிவினர் தெரிவித்தனர்.
மெதம்பட்டமைன் (methamphetamine)அடங்கிய எக்சடசி (ecstasy)எனும் போதை மாத்திரையே இதன்போது மீட்கப்பட்டதாகவும், அவற்றின் நிறை 1,600 கிராம் எனவும் சுங்கப் பிரிவினர் கூறினர்.
No comments:
Post a Comment