ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொவிட் திரிபு ஆய்வுகளின் அடிப்படையில் பெறப்பட்ட 182 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் இருந்து 160 புதிய Omicron தொற்றாளர்களும் 22 புதிய Delta தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் சமீபத்திய SARS-CoV-2 திரிபு அறிக்கையில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 182 மாதிரிகள் கடந்த டிசம்பர் கடைசி வாரம் மற்றும் ஜனவரி முதல் வாரத்தில் சமூகத்திலிருந்தும் விமான நிலையத்திலிருந்து வருகை பிரிவு மற்றும் புறப்படுதல் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மாதிரிகளிலிருந்து பெறப்பட்டதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு, கல உயிரியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் பிரிவின் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த 160 Omicron தொற்றாளர்களில் இரண்டு முக்கிய Omicron பிறழ்வுகளான (lineage) BA.1 மற்றும் BA.2 ஆகிய கலவை அடங்குகின்றன. BA.1 ஆனது, சுமார் 113 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதுடன், BA.2 ஆனது, குறைந்தது 30 நாடுகளில் அடையாளம் காணாப்பட்டுள்ளது.
Omicron அடையாளம் காணப்பட்ட இடங்கள்
இலங்கையில், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 160 புதிய Omicron தொற்றாளர்களும் அங்கொடை, கொழும்பு, தெஹிவளை, காலி, கடுவல, கண்டி, மாத்தறை, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் 139 B.A.1 பிறழ்வுகளும் கண்டறியப்பட்டுள்ளன. கொழும்பில் BA.2 இன் 17 தொற்றாளர்களும் B.1.1.529 இன் 4 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில்
இதேவேளை குறித்த தொற்றாளர்களில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 98 பேரிடமிருந்து பெற்ற மாதிரிகளில் Omicron தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை விமான நிலையத்தின் புறப்படும் பயணிகளிடமிருந்து பெறப்பட்டவை என்பதுடன், வருகை தரும் பயணிகளிடமிருந்து எவ்வித தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை. இவர்களில் சிலர் இலங்கையர்கள் என்பதுடன் மற்றும் சிலர் வெளிநாட்டு பிரஜைகளாவர்.
Delta அடையாளம் காணப்பட்ட இடங்கள்
புதிதாக அடையாளம் காணப்பட்ட Delta தொற்றாளர்களில் நுகேகொடையில் AY.28 (இலங்கை டெல்டா துணைப் பிறழ்வு) 4 பேரும், கொழும்பில் AY.104 (இலங்கை டெல்டா துணைத் திரிபு) 10 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், கொழும்பில் AY.25 மற்றும் AY.114 கண்டறியப்பட்டுள்ளது. AY.5.3 அங்கொடையில் கண்டறியப்பட்டுள்ளதுடன், B.1.617.2 அங்கொடை, கொழும்பு, இரத்தினபுரியில் கண்டறியப்பட்டுள்ளது.
BA.1 அல்லது B.1.1.529.1 ஆனது நிலையான ஆரம்ப வகையாகும். BA.2 அல்லது B.1.1.529.2 என்பது நிலையான வகையிலிருந்து வேறுபடுகின்ற stealth Omicron ஆகும். BA.3 அல்லது B.1.1.529.3 என்பது மூன்றாவது உப வகையாகும். BA.1 மற்றும் BA. 3 ஆனது S மரபணு இலக்கு தோல்வியின் தன்மையைக் கொண்டுள்ளதுடன், BA. 2 துணைப் பிறழ்வுகள் அது இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்குள் அடையாளம் காணப்பட்ட ஏனைய கொவிட் பிறழ்வுகளாக B.1.411: இலங்கை திரிபு, B.1.1.25, B.1.258, B.1.428, B.4, B.4.7, B.1.1.365, B.1.525, B.1, B.1.1.
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு கொவிட் திரிபுகளின் தோற்றம் மற்றும் இடம்பெயர்வு தொடர்பான அட்டவணை
இது தொடர்பிலான ஏனைய தரவுகள் வருமாறு
Figure 1: Change in the SARS-CoV-2 variants in Sri Lanka over time. The graph shows changes in the different variants
Figure 2: Locations of samples sequenced during the past week (4th week of December and 1st week of January)
Table 1: Number of sequences shared by each country in the South East Asia Region. (excluding samples sequenced in this round)
Figure 6: Prevalence of Omicron in different countries in the world based on sequencing data (The current round of SL data does not appear yet in this website)
No comments:
Post a Comment