WhatsApp இல் மற்றுமொரு புதிய அம்சம் : ஏனையோரின் இடுகைகளை அழிக்க அட்மின்களுக்கும் வசதி - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

WhatsApp இல் மற்றுமொரு புதிய அம்சம் : ஏனையோரின் இடுகைகளை அழிக்க அட்மின்களுக்கும் வசதி

WhatsApp மற்றுமொரு புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இது குறூப் அட்மின்கள் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் அந்தந்த குறூப்க்களில் உள்ள மெசேஜ்களை அழிக்க (Delete) அனுமதிக்கிறது. 

ஏற்கனவே தனிப்பட்ட சாட்கள் மற்றும் குறூப் சாட்கள் என இரண்டிலும் அனுப்பப்பட்ட செய்திகளை நீக்கும் வசதி தற்போது அனுப்பியவர்களுக்கு மாத்திரமே உள்ள நிலையில் அதனை அட்மின்களும் அழிக்கும் வசதியே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய அம்சம் மூலம், குறூப்பில் உள்ள பயனர்கள் அனுப்பும் மெசேஜ்களை டிலீட் செய்யும் அதிகாரத்தை அட்மின்கள் பெறுவார்கள்.

வட்ஸ்அப்பில் வரும் புதிய விடயங்கள் பற்றி அறிவிக்கும் WABetaInfo தளத்தினால் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கமாக டிலீட் செய்யப்பட்ட மெசேஜ் அறிவிப்பிற்குப் பதிலாக அட்மினால் ஒரு மெசேஜ் நீக்கப்பட்டால், அந்த அறிவிப்பு இப்போது “This was removed by an admin” (இது அட்மினால் அகற்றப்பட்டுள்ளது) என காண்பிக்கும்.

இந்த அம்சம் அன்ட்ரொய்டுக்கான வட்ஸ்அப் Beta (சோதனைப் பதிப்பு 2.22.1.1) இன் ஒரு பகுதியாக சோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தற்போது உள் சோதனைக் கட்டத்தில் இருப்பதால், இது விரைவில் பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அன்ட்ரொய்டு சாதனங்களுக்கான புதிய இன்-ஆப் கெமரா இடைமுகத்தை (new in-app camera interface) வசதியை வட்ஸ்அப் சோதித்து வருகிறது. 

புதிய இடைமுகமானது, கெமரா எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை மாற்றவும் flash பொத்தானின் இடம், கெமராக்களை மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WABetaInfo தகவல்களுக்கமைய, Android கையடக்க சாதனங்களுக்கான WhatsApp 2.22.1.2 Beta பதிப்பில் இந்த அம்சங்கள் விரைவில் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த அம்சங்கள் சோதனை பயனர்களைத் தொடர்ந்து வட்ஸ்அப்பின் நிலையான பதிப்பிலும் வருமென எதிர்பார்க்கலாம்.

ஆயினும் iOS பயனர்களுக்கு இது தொடர்பான எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


(சோதனை (Beta) செயலிகளை சோதிக்க, Play store இல் உள்ள குறித்த செயலியின் அடியில் உள்ள become a beta tester எனும் பகுதியில் உள்ள I'm In என்பதை கிளிக் செய்ய வேண்டும்)

No comments:

Post a Comment